அதிக நேரம் ஹெட் போனை பயன்படுத்துவதனால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும். சாலை விபத்துகளில் கணிசமான விபத்துகள் ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால் தான் நடக்கிறது.
தொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும். அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும்.