உடலில் நாடாப்புழு உருவாவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்...!

முழுமையாக வேக வைக்கப்படாத உணவு உட்கொள்வதாலும், பன்றி, மாட்டிறைச்சி, மீன் போன்றவற்றை சமைக்காமல் சாப்பிடுவதால் நாடாப்புழு உடலில்  உருவாகும். இந்த உணவுகளில் லார்வாக்கள் இருப்பதுதான் காரணம். எனவே உணவு ஒழுங்காக சமைக்கப்படாவிட்டால், உடலில் நாடாப்புழுக்கள் உருவாகும்  அபாயம் உள்ளது.
அசுத்தமான குடிநீரை பருகுவது, முட்டைகோஸ், கீரைகளை சரியாக வேக வைக்காவிட்டால் அவற்றின் மூலமாக நாடாப்புழுக்கள் உடலில் குடியேறும். எனவே, அசுத்தமான தண்ணீரில் வளரும் காய்களையோ அல்லது மண்ணிற்கு அருகில் முளைக்கும் காய்கறிகளை நன்றாக கழுவி உண்ண வேண்டும் என்று  அறிவுறுத்தப்படுகிறது.
 
அறிகுறிகள்:
 
பொதுவாக, நாடாப்புழு உடலில் இருப்பதை கண்டறிய துல்லியமான அறிகுறிகள் என்று எதையும் கூறிவிடமுடியாது. ஆனால் குடலில் உணவு செரிமானம் ஆன  பிறகு உருவாகும் கழிவுகள் மலமாக வெளியேறும்போது அதில் நாடாப்புழுக்களும் ஓரளவு வெளியேறும். அதிலிருந்து அவற்றின் இருப்பை அறியலாம்.
 
இதைத்தவிர, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பலவீனம், வாந்தி, அடிக்கடி பசி எடுப்பது போன்றவற்றால் நாடாப்புழுக்களின் இருப்பை அறிந்துக் கொள்ளலாம்.
 
உடலில் உள்ள நாடாப்புழுக்கள், அவற்றின் முட்டைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தால், தலைவலி, தோல் வெளுத்துப்போவது, இருமல், மூச்சுத்திணறல், பார்வைக்கோளாறு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்