எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மாமிச வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், சதா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவு அருந்திய உடன் தூங்கச் செல்லக்கூடாது. இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு. இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரத்த அழுத்தம் நோய் வராமல் ஏற்படாமல் தடுக்கலாம்.