ரத்த கட்டு குணமாக நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் புளியை சிறிது எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறியளவு கல்லுப்பை சேர்த்து கலந்து, பிசைந்து பசை போல் ஆக்கி அதை ரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டு வர ரத்த கட்டு சிறிது சிறிதாக நீங்கும்.
மஞ்சள் தரமான மஞ்சள் பொடியை சிறிது வெந்நீர் விட்டு கலந்து, அந்த கலவையை ரத்த கட்டு ஏற்பட்ட இடங்களில் களிம்பு போல் வைத்து, ஒரு வெள்ளை துணியால் கட்டு போட வேண்டும். இதை தினமும் செய்து வர விரைவில் ரத்த கட்டு சரியாகும்.
ஆமணக்கு, நொச்சி ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை சிறிது பறித்து விளக்கெண்ணெயில் வதக்கி, அந்த இலைகளை ஒரு வெள்ளை துணியால் கட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர ரத்த கட்டு கரையும்.