கால் கப் பாலில் ஆறு பாதாம் பருப்பை சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். அதை முழங்கை, முழங்காலில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் அங்கு இருக்கும் கருமை மறைந்துவிடும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’ உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.
நாயுருவி வேரைப் பொடித்து நான்கு பங்கு நீர்விட்டு, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தினால், சிறுநீரைப் பெருக்கி பித்த அமிலங்களை வெளியேற்றும். கல்லீரலின் கொழுப்பை குறைக்கும்.
அருகம்புல் சாறுடன் பால் சேர்த்து அருந்தினால், அதில் உள்ள பீட்டா சிட்டோஸ்டீரால் வைட்டமின் சி, பீட்டா கரோடின் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.