உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும்.
பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.
ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு காரணமின்றி அடிக்கடி தும்மல் தோன்றும். இதற்கு மேற்கண்ட முறையில் நல்ல குணம் பெறலாம்.
ரோஜா பூக்களில் இருந்து அத்தர் எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. தாகம், ஒக்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்தவும், மலமிளக்கவும் ரோஜா பூக்கள் பயன்படுகின்றன.