உப்பு என்றழைக்கப்படும் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது. மசாலா க்கள் நிறைந்த உணவு, இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு நிறைந்த துரித உணவுகள், சாட் வகைகள் அதிகம் விரும்பி உண் ணப்படுகிறது. இதில் இருக்கும் உப்பு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு உடலில் சேர்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு மன அழுத்தத்துக்கு உண்டு. மனதில் அழுத்தம் அதிகரிக்கும் போது இதயத்தின் துடிப்பும் அதிகரிக்கும். இதனால் இரத்த நாளங்களில் அழுத்தம் உண்டாகிறது. அதனால் முதலில் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்வது நல்லது. பணிச்சுமையிலிருந்து மீண்டு வர தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.