எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய பனங்கிழங்கு !!

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.
 
பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.
 
உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.
 
சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
 
வெயிலில் காயவைத்த‍ பனங்கிழங்கை (ப‌ச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவாக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள‍ அல்ல‍து உடலிலிருந்து வெளியேர மறுக்கும் மலத்தை இளகவைத்து, எளிதான மலத்தை வெளியேற்றும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்