பலாப்பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:58 IST)
பலாப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலிற்கு தருகிறது.


பலாப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார் சத்துக்கள் நிறைந்துள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்து ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலால் விரைவாக உடைக்கப்படுகிறது.

பலாப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது, இது வயதான செயல்முறையை குறைக்கிறது.

பலாப் பழத்தில் உள்ள காலசியம் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. மேலும் அதில் உள்ள பொட்டசியம், காலசியம் சிறு நீர் வழியாக அதிக அளவில் வேலுயேறுவதை குறைக்கிறது.

எலும்புகள் சம்பந்தமான நோய்களான ஆர்த்திரிஸ் மற்றும் ஆஸ்டிரோப்ரோசிஸ் போன்ற நோகளில் இருந்து பாதுகாக்கிறது.
இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

பலாப் பழத்தில் உள்ள கணிசமான அளவு இரும்புச் சத்து இரத்த செல்களின் அளவை பராமரித்து அனீமியா போன்ற நோகளில் இருந்து பாத்துக்காக்கிறது.

உடலில் உள்ள ஊட்ட சத்து ஏற்றத் தாழ்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக ஆஸ்துமா தாக்குதல்களைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக மாசுபாட்டால் ஆஸ்த்துமா தொடர்பான அறிகுறிகள் தூண்டப் படும்போது, ​​

பலாப்பழம் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிப்பதால் நீரிழிவு மருந்தின் அளவை மாற்ற வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்