சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமேயானால் இந்த நொச்சி இலைகளை தூளாக நசுக்கி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு அதில் ஆவி பிடித்து வந்தால் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைபாரம், தலைவலி, தலையில் நீர் கோர்த்து இருப்பது இவைகள் அனைத்தும் வியர்வையாக வெளியேறிவிடும்.
மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.
வீக்கம், உடல்வலி, உடலில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நொச்சி இலையை வாணலியில் போட்டு வதக்கி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் எங்கெல்லாம் வலி வீக்கம் இருக்கிறதோ அங்கு ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.