வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களின் ஈறுகளை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நகச்சுத்தி வேப்பிலையை மைபோல் அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து, அதை நோய் கண்ட இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும்.