பின்னர் நீரை வடித்து, அடியில் பார்க்க வெண்மையான மாவு படிந்திருக்கும். மீண்டும் இதுபோல் கரைத்து வடிக்கட்டிட, சுத்தமான வெண்மை நிறத்தில் மாவு போல் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். சர்க்கரைக்கு பதிலாக இதைப் படுத்தலாம். நீரிழிவில் தோன்றும் கை, கால் அசதி உடல் மெலிவு அதிதாகம், பாதங்களில் எரிச்சல் மற்றும் குத்துவது போன்று வலி ஆகியன நீங்கும்.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும்.