எளிதாக கிடைக்கும் வேப்பிலையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா...!!

வேப்பிலை என்பது இன்றும் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக இருந்து வருகிறது. வேப்பிலைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. இதை நாம் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடலில் தோன்றும் கட்டி, அரிப்பு, அக்கி, சொரி, சிரங்கு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வெளி பூச்சாகவும், அலர்ஜி, விஷக்கடி, நீரழிவு நோய், வயிற்று பூச்சி போன்ற பிரச்சனைகளுக்கு உள் மருந்தாகவும் பயன்படுத்தலாம். 
 
வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்தும் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.
 
வேப்ப முத்து, சிறிய வெங்காயம் ஆகியவற்றை நன்கு அரைத்து புழுவெட்டு ஏற்பட்ட இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி நன்றாக வளரும். வேப்பங் கொட்டையின் பருப்புகளை அரைத்து காயங்கள், புண்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
 
வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பித்த வெடிப்புகள், நகசுத்தி போன்ற பிரச்சனைகளுக்கு பற்று போட்டால் பலன் கிடைக்கும். வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, அறிய பின் அந்த நீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் தீர்வாகும்.
 
வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும். மாதம் ஒரு முறை வேப்பிலையை உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். 
 
வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும். சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு வேப்பிலை அரைத்து கொடுத்தால் வயிற்றை சுத்தம் செய்து பசியை தூண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்