எளிதில் கிடைக்கும் செம்பருத்தி பூவில் உள்ள மருத்துவகுணங்கள் !!

தலைமுடி செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ளவேண்டும். இந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலைமுடி கருத்து அடர்த்தியாக வளரும்.

மாதவிடாய் பிரச்சனை பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். 
 
இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் நீங்கும். 
 
தினமும் காலையில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி, உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது. 
 
பேன் தொல்லை இருப்பவர்கள் செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளித்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் தொல்லை நீங்கும். 
 
செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும், அப்பூவை நீரில் வேகவைத்து, வடிகட்டி அருந்துவதாலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும். இரும்பு சத்து ரத்தம் விருத்தி ஆவதற்கும், உடலின் பலத்திற்கும் இரும்பு சத்து மிகவும் அவசியமாக இருக்கிறது. 
 
செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை பொருந்தியது. இந்த பூவை சாப்பிடுவதாலும், அரைத்து சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து செய்து உடலை பளபளக்க செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்