கால்களில் ஏற்படும் வீக்கம் குறைய செய்யவேண்டிய மருத்துவ குறிப்புகள் !!

உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் ‘எடீமா’ என்று பெயர். சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும். இருப்பினும், அடிவயிறு அல்லது முகத்தில் கூட எடீமா பாதிக்கக்கூடும். பிரசவம், பாதம் அல்லது  கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் கூட வீக்கம் ஏற்படும்.
 
கர்ப்பிணிகள் காலில் வீக்கம் ஏற்பட்டால் தவறாது மருத்துவரை அணுக வேண்டும். வீக்கத்துடன் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஆகியவை ஏற்பட்டாலும் உடனே  மருத்துவரை அணுக வேண்டும்.
 
உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில்  கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.
 
வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும்  மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.
 
உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்