ஜீரணக்கோளாறு நீங்குவதற்காக, அனைத்து வீடுகளிலும், சமையலுக்கு சீரகம் சேர்க்கப்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்ள சீரகம் உதவுகிறது.
சீரகத்தில் பொட்டாசியம் உள்ளதால் இதனை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது. சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.