துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும். தொற்றுநோய்களை எதிர்க்கும். சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.