லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்...!!

வெள்ளி, 13 மே 2022 (17:31 IST)
லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது. பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.


தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீ தூளை கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் அரை எலுமிச்சம் பழ சாற்றைக் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயாராகிவிடும்.

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் டீயைக் குடிப்பதால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

செரிமான பிரச்சனைகளை தீர்க்க லெமன் டீ பெரிய அளவில் உதவி புரிகிறது. உடல் எடையை குறைப்பதிலும், சீராக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கான மூல காரணியாக இருக்கும் அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்துகிறது.

நாம் சாப்பிடும் உணவுகள் நன்றாகச் செரிமானம் ஆவதற்கு லெமன் டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத சில உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்