மாதுளை பூவில் உள்ள அற்புத மருத்துவகுணங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் !!

மாதுளைச் செடியின் இலை கொழுந்து, பூ பிஞ்சு, பழம், விதை, பட்டை வேர் அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது. 

மாதுளம் பூவை சுத்தம் செய்து அவற்றை உரலில் போட்டு இடித்துப் பிழிந்து, ஒரு அவுன்ஸ் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை அவுன்ஸ் சுத்தமான தேனையும் சேர்த்து கலக்கி காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
 
அடிக்கடி ஏற்படும் வாந்தி, பித்த வாந்தி, ஆசனக் கடுப்பு, மயக்கம். அடிக்கடி மலம் கழித்தல், மலத்துடன் ரத்தம் சேர்த்து கழித்தல், மலம் கழித்தவுடன் ஆசனக்கடுப்பு  போன்றவற்றிற்கும் மேற்கண்டவாறு சாப்பிட்டால் பூரண குணம் கிட்டும்.
 
10 மாதுளம் பூவை எடுத்து சுத்தம் செய்து, அதை நசுக்கி ஒரு சட்டியில் போட்டு, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு தம்ளராக வற்றும் வரைக் காய்ச்சி அக்கஷாயத்தில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு 20 நாட்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
 
அதிக உஷ்ணம் காரணமாக மூக்கில் ரத்தம் வந்தாலும், பீனிச நோய் காரணமாக மூக்கில் அடிக்கடி ரத்தம் வந்தாலும் கீழ்க்கண்ட மருந்து விரைவில் குணமாக்கும்.
 
மாதுளம் பூவை சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்துப் பிழிந்து 2 அவுன்ஸ் சாறு எடுக்க வேண்டும். அதனுடன் அதே அளவு அருகம்புல் சாற்றையும் சேர்த்து அத்துடன் ஒரு அவுன்ஸ் சுத்தமான தேனையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்