100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது 9% சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ் அதிகம் பயன்படுகிறது.
பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. பீன்ஸில் உள்ள ‘இசோபிளவோன்ஸ்’ எனப்படும் உயிர்சத்து உடலுக்கு வலுவாக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.