அற்புத பலன்கள் நிறைந்த சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது...?

சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம்  தீரும்.

* உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம்.
 
* சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
 
* வயிற்றுக்கு நல்லது. அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பாதிப்புகளில் இருந்து நீங்க, சீரக தண்ணீர் உதவும். அதுமட்டுமின்றி சீரக தண்ணீர்  வலி நிவாரணியாகவும் செயல்படும். 
 
* இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து  எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக நாட்டுச் சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில்  சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும்.
 
* சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து, சித்த மருத்துவர்கள் செய்யும் ‘சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் மிக  முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து. 
 
* நீரிழிவு நோய் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
 
* சீரகத்தில் இருக்கும் வைட்டமின் இ, முகத்தில் வரும் சுருக்கங்கள் வராமல் இருக்கவும், வேகமாக வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்