காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறை குடிப்பதால் என்ன நன்மைகள்...?

வெள்ளி, 27 மே 2022 (17:17 IST)
இயற்கையாக  கிடைக்கும் கற்றாழை  சாறை எடுத்துக்கொள்வதால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும். கடைகளில் விற்கப்படும் சர்க்கரை உள்ள கற்றாழை சாறை பயன்படுத்துவதால் இந்த நன்மைகள் கிடைக்காது.


அதாவது சக்கரை சேர்த்த கற்றாழை சாறை  குடிப்பதால் உடலில் சக்கரை அளவு அதிகரிக்கும். அது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே இயற்கையாக கிடைக்கும் கற்றாழை சாறை பயன்படுத்துவதே உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கற்றாழை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே உடல் எடை குறைகிறது.

கற்றாழை சாறு ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே மலச்சிக்கலை சரிபடுத்துகிறது. உடலில் கழிவுகள் சேருவதை தடுக்கிறது. இதுவும் உடல் எடைகுறைய ஒரு காரணம்.

கற்றாழை சாறை காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடுவது நல்லது. காற்றாழையை தினவும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது கற்றாழை சாறை  எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது எடை குறைக்க உதவுகிறது.

கற்றாழையுடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறுது தேன் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை சாறை உணவுக்கு முன்பு எடுத்து கொள்வதே சிறந்தது.

கற்றாழை ஜெல் என கடையில் விற்கும் எதையும் வாங்கி உண்ண வேண்டாம். கடையில் விற்பவை தோலில் தடவ பயன்படுத்தக்கூடியது. அதில் நிறைய வேதிப்பொருட்கள் இருக்கும். அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதனை வாங்கி உட்கொள்ள வேண்டாம். இயற்கையாக கிடைக்கும் கற்றாழை சாறை உட்க்கொள்வதே நன்மை பயக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்