எலுமிச்சையில் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை, மலை எலுமிச்சை, காட்டு எலுமிச்சை எனப் பலவகைகள் உண்டு. இதில் காட்டு எலுமிச்சை அதிக மருத்துவ குணங்கள் நிரம்பியது.
எலுமிச்சம் பழ சாற்றில் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும், ஒரு தேக்கரண்டி மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து, காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உடையவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம். இது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை குணமாக்கும்.