உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளை நன்றாக பொடி செய்து, அதை தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வருபவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. ஏதேனும் ஒரு உணவு வேளையில் மற்ற உணவுகளைத் தவிர்த்து முளைகட்டிய கொள்ளு சாப்பிட்டு வருவதால் உடல் எடை விரைவில் குறையும்.
இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதம் அதிகம். உண்மையில், பருப்பு வகைகளில் மிக அதிகமான கால்சியம் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், சைவ உணவுகளில் புரதச்சத்து மிகுந்த ஒன்றாகவும் கொள்ளு உள்ளது.
சிறிதளவு கொள்ளு தானியங்களை ஒரு கிண்ணத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அக்கிண்ணத்தில் இருக்கும் நீரோடு கொள்ளு தானியங்களை வேகவைத்து, அந்த நீரை சேமித்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் லூகோரியா பிரச்சனை விரைவில் தீருகிறது.