உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கற்பூரவள்ளி !!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (12:23 IST)
கற்பூரவள்ளி இலையில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் காய்ச்சலில் இருந்து விடுபட நல்ல பலன் அளிக்கும்.


கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது.

கற்பூரவள்ளியின் இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காய்ச்சல் போகும்.

கற்பூரவள்ளியின் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாறுடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

கட்டிகளுக்கு கற்பூரவள்ளியின் இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்