உடல் ஆரோக்கியமாக இருக்க முருங்கை விதையின் பங்கு என்ன...?

புதன், 9 மார்ச் 2022 (19:16 IST)
முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.


ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்மை பெற்றுள்ளது. அதோடு சர்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும். செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.

முருங்கை விதை: பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப் பெறும். முருங்கை பூக்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.

பொடியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்