உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்

புதன், 3 நவம்பர் 2021 (01:06 IST)
தண்ணீர் அதிகமாகக் குடிப்பது கொழுப்பைக் கரைத்திட உதவும். மேலும் கோடை காலங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைத் தடுக்கும்.
 
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்க வேண்டும்.
 
உடல் Dehydrate ஆவதை எடைக் குறைப்பு என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புரதச் சத்து நிறைந்த மீன் உணவுகளை நிறைய சாப்பிடலாம். இதில் உள்ள Omega 3 Fatty Acid உடல் எடை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதயத்திற்கும் இதமானது.
 
பச்சைக்காய்கறிகளை உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் நறுக்கி துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் உணவுக்கு முன் சிறிது சாப்பிடுங்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதோடு நீங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க உதவும்.
 
முட்டைக்கோஸ்,குடை மிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும். 
 
எண்ணையில் பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்காமல் நார்ச் சத்து நிறைந்த முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்