வெந்தயம் போல் ஒரு குளிர்ச்சியான பொருள் வேரு ஏதுவுமில்லை.வெறும் தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊறவைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுக்கு குட் பை சொல்லாம். அதே போல், ஊறவைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.
பெயரை கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டும். இலுப்பை புண்ணாக்கை நாட்டு மருந்துகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி வந்து, இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும். இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.
கற்றாழை சாற்றை தலையில் வடு பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு, கைகள் தலை முடியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு, வெது வெதுப்பான நீரில் தலையை அலசல் வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி செய்தால், பொடுகு தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு நீங்கும்.