வாய் புண், வாய் நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெய்யில் இரு வேளை மூன்று நாள் கொடுக்க குணமாகும்.
தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும்.
பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடித்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டு கலந்த பாலுடன் உட்கொண்டுவர உடலுக்கு நன்மை தரும்.