உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மஞ்சள் எவ்வாறு உதவுகிறது....?

சனி, 10 செப்டம்பர் 2022 (09:53 IST)
மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், குடற் பூச்சிகள் போன்றவை நீங்கும். மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருள் இருப்பதால், இது எல்.டி.எல் கொழுப்பைக் குறைத்து அதன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது.


புண்கள் வேகமாக ஆறவேண்டும் என்றால் புண்களில் கிருமித் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். புண்கள் மீது மஞ்சளை தடவி வந்தால் இயற்கையான கிருமிநாசினியாக செயல்பட்டு, புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல் காத்து புண்களை வேகமாக ஆற்றுகிறது.

பூச்சிகள் கடிப்பதால் சிலருக்கு உடலில் ஒவ்வாமை, அரிப்பு உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றை நீக்க மஞ்சளை உரசி அந்த இடத்தில் தடவி வந்தால் பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.

மஞ்சள் புற்றுநோய் தடுக்கும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பருவகால குளிர் மற்றும் காய்ச்சலை விரட்ட உதவுகிறது. உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மஞ்சளைப் பயன்படுத்தலாம். அதன் தொடர்பில் நடந்த ஆய்வில் 60 பேர் சோதிக்கப்பட்டனர். அதில் மஞ்சளை உட்கொண்டோரின் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்திருந்ததாகத் தெரியவந்தது.

முகப்பருக்கள்,  கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது. பாலில் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் உடல் இரதம் சுத்தமாவதோடு இதய நோயை கட்டுப்படுத்துகிறது. முட்டையும், மஞ்சளும் நல்ல சூடு பாலில் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு சளி, இருமல் விரைவில் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்