காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று ஒரு வகை உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்கு, இரும்பை காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது சற்று நீர்த்திருக்கும். இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முகத்தில் வறட்சி அதிக கொழுப்பு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்துவிடும்.
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.