தேனுக்கு முன் தேன்மெழுகை சாப்பிடுங்க...

ஞாயிறு, 1 ஜூலை 2018 (18:33 IST)
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களால், எண்ணிலடங்காத நன்மைகள் நம்மைச் சுற்றியும் நமக்குத் தெரியாமலும நடந்து கொண்டே இருக்கிறது. 

 
பெண் தேனீக்களின் வயிற்றுப் பகுதியில் இயற்கையாக இருக்கும் சுரப்பிகளில் இருந்து தேன் மெழுகு உற்பத்தியாகின்றன. 
 
இனப்பெருக்கத்துக்காகவும், உற்பத்திக்காகவும் தானே தயாரித்துக் கொண்ட தேன் கூட்டில் அவற்றை சேகரித்துக்கொள்கிறது. சேகரிக்கப்பட்ட அந்த தேன் மெழுகை எடுத்து பல்வேறு நோக்கங்களுக்காக தேனீ உற்பத்தியாளர்கள் பயன்பாடுத்தி வருகின்றனர்.
 
தேனீக்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்தால்தான் ஒரு பவுண்டு தேன் மெழுகைச் சேகரிக்க முடியும். 
 
மஞ்சள் தேன் மெழுகு, இது தேன்கூட்டில் இருந்து நேரடியாகப் பெறப்படும்  
 
வெள்ளைத் தேன் மெழுகு, இது வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருப்பதால் வெள்ளைத் தேன்மெழுகு எனப்படுகிறது. சிகிச்சைக்கு உதவும் ஆல்கஹால் தயாரிக்க இந்த மஞ்சள் தேன் மெழுகு பயன்படுகிறது.
 
தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், அழகான உதடுகளுக்கு நல்ல தைலமாகவும், வலி நிவாரணியாகவும் தேன்மெழுகு இருக்கிறது. 
 
மனித உடலில் அடர்த்தியாக உள்ள புரதக் கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கு தேன் மெழுகு பயன்படுகிறது. 
 
சிகிச்சைக்கு உதவும் நறுமணங்களைக் கொண்ட தேன் மெழுகுகள் கேண்டில் வடிவில் தற்போது கிடைக்கின்றன. இவை சுற்றுச்சூழலுக்கும், உடலியக்கத்தின் ஆசுவாசத்திற்கும் சாலச்சிறந்ததாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்