அடிக்கடி இஞ்சி ஜூஸ் குடித்தால் என்ன செய்யும் தெரியுமா..?
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (08:43 IST)
வீடுகளில் உணவிற்காக பயன்படுத்தப்படும் மூலிகையான இஞ்சி பல்வேறு நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகும். இஞ்சியை சாறு பிழிந்து ஜூஸாக குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
இஞ்சியை சாறு எடுத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இஞ்சி ஜூஸ் தயாரிக்க வேண்டும்.
இஞ்சி ஜூஸ் குடிப்பதால் சளி, இருமல் மற்றும் செரிமான பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.
அடிக்கடி இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால் மூளையில் ப்ரோட்டீன் அளவு அதிகரித்து மூளை ஆரோக்கியம் மேம்படும்.
இஞ்சியில் உள்ள ஆண்டிபயாடிக் தன்மை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால் அதில் உள்ள நிவாரணி செயல்பாடுகள் மூட்டுவலியை குணப்படுத்தும்.
இஞ்சி ஜூஸ் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால்கள், பாராடோல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோயில் இருந்து காக்கும்.