கொய்யா இலையை கஷாயம் போல செய்து தொடர்ந்து குடித்து வந்தால், அதிகப்படியான உதிரப்போக்கு மட்டுப்படும், அத்துடன் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு திரும்பும்.
செரிமான பிரச்னைகளால் அவதி படுபவர்கள் கொய்யா இலையின் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமானம் ஒழுங்காக நடை பெறுவதற்கு உதவுகிறது.
நீரழிவு நோயினால் அவதிபடுபவர்கள் கொய்யா இலையின் நீரை பருகும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டு படுத்திக்கிறது. பல விதமான தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றிற்கு
கொய்யா இலையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான புரதச்சத்து , வைட்டமின் C, B6, கோலைன், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு போன்ற தன்மைகளையும் உள்ளடக்கியது.