பாரம்பரிய மருத்துவத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள இஞ்சி !!

பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் இஞ்சிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இஞ்சி பொதுவாக சுக்கு, சுக்கு பொடி, இஞ்சி எண்ணெய், இஞ்சி சாறு போன்ற பல வகைகளில் கிடைக்கிறது மற்றும் சுக்கு பல மருந்துகளில் மூலப்பொருளாகவும் இருக்கிறது.

இஞ்சி நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் இருந்து காக்கிறது. இரத்த இன்சுலின் அளவைக் குறைக்க இஞ்சி உதவுகிறது என்றும் உயர் இரத்த இன்சுலின் அளவு உடல் பருமனுடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் சொல்லப்படுகிறது.
 
இஞ்சி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து விரைவாக உடல் எடையை குறைக்கிறது. இஞ்சிச்சாறு பலவகையான பாக்டிரியாவினை அழிக்க  உதவுகிறது. பல் ஈறு வீக்கம், வாய் வழி பாக்டீரியாக்களை அழிக்க மிகவும் உதவுகிறது.
 
சுவாச நோய்தொற்றுக்கு காரணமான வைரஸ்க்கும் எதிராக இஞ்சி சிறப்பாக செயல்படுகிறது. கணைய புற்று நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களுக்கு இஞ்சி மிக  சிறந்த எதிர்ப்பு சக்தியாக உள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது.
 
சிலர் மருந்து சாப்பிடுவதனால் ஏற்படுகின்ற குமட்டலுக்கும் இஞ்சி பெரிதும் பயன்படுகிறது.
 
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இஞ்சி மற்றும் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படுவதோடு, பிற நோய்கள் ஏதும் அவர்களை அண்டாமல் காக்கும்.
 
இஞ்சி பயனுள்ளது என்றாலும் கர்பிணிப் பெண்கள் அளவோடு எடுக்க வேண்டும். அதே சமயத்தில் மருத்துவரின் ஆலோசனைபடி உட்கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்