நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் மருத்துவ குணம் கொண்ட பூண்டு !!

புதன், 2 மார்ச் 2022 (11:29 IST)
பூண்டுகளில் ஒருதலை பூண்டு, மலை பூண்டு, தரை பூண்டு, நாட்டு பூண்டு, தைவான் அல்லது சைனா பூண்டு என்று பல வகைகளில் உண்டு.


பூண்டு பெரும்பாலும் எல்லா சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு,அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

பூண்டுத் தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூண்டு மருத்துவத்திலும், சமையலிலும் இன்றியமையாத பொருளாக உள்ளது. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமைகின்றன.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் உடல் சோர்வு, உடல் பலவீனம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும். பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உடலுக்கு மிகுந்த நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது. இதனால் உடலும் மணமும் புத்துணர்ச்சி அடைகிறது.

தாய்பால் அதிகம் சுரக்க சுரக்க பூண்டை வேகவைத்து பாலில் கலந்து சாப்பிடுவார்கள். பாலில் பூண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் தொப்பை படிப்படியாக குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.

சளி தொந்தரவு கொண்டவர்கள் பாலில் நான்கு பூண்டு பற்களைச் சேர்த்து குடித்துவந்தால் நெஞ்சில் உள்ள சளி இளகி கழிவில்  வெளியேறும். காச நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்து. பூண்டில் இருக்கும் ஈதர் நுரையீரல் குழாயில் கெட்டியான சளி அடைத்திருந்தால் அதைக் கரைத்து வெளியேற்றும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்