அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி!!

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரும் தன்மை கொண்டது.
கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும்.
 
கற்பூரவள்ளியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற  நோய்களுக்கு முக்கிய மருந்தாகும்.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். 
 
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக்  காச்சல் போகும். 
 
கற்பூரவள்ளி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து  வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்