நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது.
நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை கால்நடைகள் உண்ணாது. கிராமப்புறங்களில் வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும் இந்த மூலிகை செடியை அதிகமாக காணலாம்.
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும்.