எண்ணற்ற மருத்துவ பயன்கள் நிறைந்துள்ள அத்திப்பழம் !!

சனி, 4 டிசம்பர் 2021 (11:32 IST)
அத்தியில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, சீமையத்தி, பேயத்தி என பல வகைகள் உண்டு. அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து, காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.

உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பை தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள நச்சுகளையும் நீக்குகிறது.
 
அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். அத்தி காய்களில் இருக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவி வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.
 
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளையாவது சாப்பிட்டு வந்தால் தோல்களில் தோன்றும் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், நிறமாற்றம் போன்றவை குணமாகும்.
 
தினசரி 5 அத்திப்பழம் காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி தாது விருத்தியாடையும். ஆண்மலட்டு தன்மை நீங்கும்.
 
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கலை குணமாக்க தினமும் 5 அத்திப்பழங்களை இரவில் சாப்பிட்டு வரவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்