கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரிக்க உதவுகிறதா காளான்...?

புதன், 9 மார்ச் 2022 (10:23 IST)
உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது.


காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.

உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வேலையை திறம்பட செய்கிறது. செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது.

காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்