கருப்பு உப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் என்ன....?

செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:50 IST)
கருப்பு உப்பு நாம் உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம் குளோரைடு தான் உள்ளது இருந்தாலும்  கருப்பு உப்பில் சோடியம் அளவு குறைவாக உள்ளது.


மூட்டு வலி உள்ளவர்கள்  கைப்பிடி அளவு உப்பை எடுத்துக்கொண்டு  ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும் பின் அதை எடுத்து ஒரு துணியில் கட்டி வலியுள்ள இடங்களில்  ஒத்தடம் கொடுத்து மசாஜ் செய்தால் மூட்டுவலி இருந்த இடம் காணாமல் போகும் என்றும் கூறுகிறார்கள்.

நாம் உணவு உண்டபின் ஒரு சில பேருக்கு வயிறு உப்புசமாக உள்ளதுபோல தோன்றும், அவ்வாறு உள்ளவர்கள்  கடல் உப்பு பயன்படுத்தாமல் கருப்பு உப்பு என பிளாக் சட்டை பயன்படுத்தி வந்தால் இது போன்ற கோளாறுகள் வருவதில்லை.

மலசிக்கல் உள்ளவர்கள் சிறிதளவு  கருப்பு உப்பை  நீரில் கரைத்து  அதனுடன் இஞ்சி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்திவர மலம் வெளியேறி மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை நீக்க  உணவில் அடிக்கடி கருப்பு உப்பை எடுத்துக்  கொண்டால்   உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த உப்பை  பயன்படுத்தினால் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தாமல்  சர்க்கரையை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் முடி வெடிப்பு நீங்கி முடி கருப்பாக வளரும் மற்றும் நீளமாக வளரும் என்று கூறுகிறார்கள்.

கருப்பு உப்புடன் தக்காளி  ஜூஸ்கலந்து தலைக்கு  தலைக்கு குளித்து வந்தால் தலையிலுள்ள பொடுகு நீங்கும் என்று கூறுகிறார்கள்.

குளிக்கும் நீரில் கருப்பு  உப்பை  போட்டு கரைத்துவிட வேண்டும் பின் அந்த நீரை  தலைக்கு குளித்து  வந்தாள்  சருமம் பளபளப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்