பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி, டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர்.
மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். வயதான தோற்றத்தை குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.
கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால் தொடர்ந்து கிரீன் டீ அருந்தும்போது இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.