உடல் எடை குறைக்க உதவுகிறதா பச்சை பட்டாணி....?

பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டாச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. இது கலோரிகல் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கல் அடங்கியுள்ளன.
பட்டாணியில் இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
 
பச்சை பட்டாணி அதிக அளவு நார்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியைக் கொண்டுள்ளது. எனவே இக்காயினை உண்ணும்போது இதில் உள்ள  நார்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துவதால் நொறுக்கு தீனியின் அளவு குறைகிறது. மேலும் இது குறைந்த அளவு எரிசக்தியைக் கொடுக்கிறது. அத்துடன் உடலுக்குத் தேவையான நுண்ஊட்டச்சத்துகள் காணப்படுவதால் இதனை உண்டு ஆரோக்கியமான உடல்  இழப்பினைப் பெறலாம்.
 
இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பினை இக்காயில் உள்ள விட்டமின் பி3(நியாசின்), பி1(தயாமின்) மற்றும் ஃபோலேட்டுகள் எலும்பு  புரை நோய் ஏற்படாமல் தடை செய்கிறது. இக்காயில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிஜென்டுகள் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை  தடைசெய்கிறது.
 
பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே பச்சை பட்டாணி சூப்பினை அருந்தி சீரான இரத்த அழுத்தத்துடன் இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.
 
பச்சை பட்டாணியில் உள்ள நார்ச்சத்தானது செரிமானப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் கரையாத நார்சத்துகள் காணப்படுகின்றன.
 
பச்சை பட்டாணி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை எளிதாக வெளியேற்றுகின்றன. 
 
பச்சை பட்டாணியில் உள்ள விட்டமின் கே-வானது உடலானது கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. மேலும் இக்காயில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து அவற்றினை வலுவாக்குகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்