உடல் வறட்சி மிக கொடுமையானது. அது பேராபத்துகளை உருவாக்கக் கூடும். மயக்கம், வாந்தி, தலை சுற்றல், மதுரம் மன பாதிப்புகள், ஞாபக மறதி, கவனக் குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்க கூடும். உடல் வறட்சி குறைந்த ரத்த அழுத்தம் அதிக சோர்வு போன்ற உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடும்.
குளிர்ந்த நீர் பருகுவது உடம்பில் கலோரிக்களை விரைவாக எரிக்கும். ஆய்வு கூறுவது என்னவென்றால், வழக்கத்தை விட ஒரு லிட்டர் தண்ணீர் அதிகம் அருந்துவதால் நீங்கள் உடல் எடையை ஒரு சில மாதங்களில் குறைக்கலாம். தண்ணீர் அருந்துவது உங்கள் உடலில் சக்தியை அதிகரிக்கும்.