வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒன்று. இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. மேலும், வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடும் கருமையை நீக்கி, ஆரோக்கியமான பளபளப்பை உங்களுக்குத் தந்திடும்.
வாழைப்பழத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை உள்ளது. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவிடும். இது சரும சுருக்கங்களை தவிர்க்கவும், முகப்பரு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவிடக்கூடும்.
குறிப்பு 1: முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து, பிசைந்து கொள்ளவும். கண்களைத் தவிர, முகத்தின் பிற பகுதிகளில் பிசைந்த வாழைப்பழ கலவையை நேரடியாக தடவவும். சுமார், 15-20 நிமிடங்களுக்கு அதனை அப்படி ஊற விட்டு, பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவிடவும்.
குறிப்பு 2: பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள். பின் அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் அதை முகத்தில் கருமை படிந்த இடத்தில் அதிக கவனம் செலுத்தி, அவ்விடத்தில் தடவுங்கள். இதனை ஒரே ஒரு முறை செய்து பாருங்கள் போதும், நீங்களே வித்தியாசத்தைக் காணலாம்.
குறிப்பு 3: சிறந்த ஈரப்பதத்தை பெற வேண்டுமானால், வாழைப்பழத்தோடு தேன் கலந்து பயன்படுத்தவும். இருப்பினும், எண்ணெய் பசை உள்ள சருமம் உடையவர்கள் இந்த கலவையை பயன்படுத்துவதை தவிர்த்திடவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. குறிப்பாக குளிர்காலத்தில் இதனை செய்வது சருமத்திற்கு நல்லது.