ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும்.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.