தலைமுடி உதிர்வதை தடுக்கும் மருதாணி எண்ணெய் !!

மருதோன்றி பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. 

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். அதனால்  நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக  மருதோன்றி விளங்குகிறது.
 
மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறையும், வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.
 
கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும்,  உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
 
கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும். 
 
மருதோன்றி இலையை எண்ணெய்யில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பதமான எண்ணெய்யை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.
 
கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும்.  கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல  உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும். அழகுக்கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்