எவற்றில் ஏராளமான புரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளது தெரியுமா...?

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (09:58 IST)
ஒரு கப் சமைக்கப்பட்ட சோயாபீன்ஸில், கிட்டத்தட்ட 28 கிராம் புரோட்டின் நிறைந்துள்ளது. சோயாபீன்ஸ் பல்வேறு உணவுகளுக்கு மூலப்பொருளாக இருக்கிறது. இதனை நொறுக்குதீனியாக பயன்படுத்தலாம்.

பூசணி விதைகளில் பாஸ்பரஸ், ஜிங்க், மக்னீசியம், புரோட்டின்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 30 கிராம் பூசணி விதையில் நிறைந்துள்ள புரோட்டின்கள், முட்டையில் உள்ள புரோட்டின் அளவை விட அதிகம்.
 
பருப்பு புரோட்டின்களுக்கான மிகச்சிறந்த உணவாக உள்ளது. இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களும், அத்தியாவசியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஒரு கப் பருப்பில் 14 முதல் 16 கிராம் புரோட்டின் உள்ளது.
 
சணல் விதைகளில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு புரோட்டின்கள் உள்ளன. இரண்டு தேக்கரண்டி விதையில் 6.3 புரோட்டின் உள்ளன. மேலும், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான லினோலிக் அமிலம், ஒமேகா 3 அமிலமும் உள்ளன.
 
இந்த தானியத்தில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக தசைகளை வலுப்படுத்தும் அர்கினைன் உள்ளது. ஒரு கப் திணையில் 8 கிராம் புரோட்டின் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
பன்னீரில் புரோட்டின் அதிகளவு உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகளும் உள்ளன. 100 கிராம் பன்னீரில் 2 கிராம் புரோட்டின் உள்ளது. இது முட்டையில் உள்ள புரோட்டினை விட மிக அதிகமாகும்.
 
சுண்டலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. வேக வைக்கப்பட்ட அரை கப் சுண்டலில் 7.3 கிராம் புரோட்டின் உள்ளது. இது ஆற்றலை அதிகரிப்பதுடன், பசியின்மையையும் கட்டுப்படுத்தும். மேலும், க்ளோசிகிட்டினின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்