நாட்டு தக்காளி புளிப்பு சுவையும், விதைகளும் நிரம்பியது. இதை சமைக்கும்போது விதைகளை வடிகட்டிய பிறகே சமைக்க வேண்டும். இல்லாவிடில் அவை சிறுநீரகத்தில், குறிப்பாக ஆண்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும்.
ஜீரண சக்தியைத் அதிகரிக்கும். சொறி, சிரங்கு, போன்ற தோல் நோய்களைப் நீக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். உடல் பருமனை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தக்காளி.
தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து அதிகளவு உள்ளது.