உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் சிலவகை காய்கறிகள் என்ன தெரியுமா...?

ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
 
சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
 
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை,  எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
 
பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், கண் நோய்கள் நெருங்காது.
 
தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
சரும சுருக்கங்கள் மற்றும் தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் பலாப்பழ கொட்டைகளை சாப்பிட்டு வரலாம். இவை ரத்த சோகையை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்